25.1 C
Jaffna
January 3, 2025
Pagetamil
மலையகம்

தாயை கொன்ற சந்தேகத்தில் இளைய மகள் கைது!

இரத்தினபுரி, கஹவத்தை, வெள்ளந்துறையில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட தாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர்களது இளைய மகள் இன்று (16) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13ஆம் திகதி, ஜயசுந்தர முதியன்செல  வினிதா ஜயசுந்தர என்ற எழுபத்தொரு வயதுடைய பெண் வீட்டருகே கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட தாயின் இளைய மகள் முப்பத்தெட்டு வயது திருமணமாகாத பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹவத்தை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன பிள்ளைகளையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மகள் தனது தாயை வீட்டுக்குள் கழுத்தை நெரித்து கொன்று சில மணித்தியாலங்களின் பின்னர் வீட்டின் பின்னால் இழுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர், வீட்டினுள் சிதறிக் கிடந்த இரத்தக் கறைகளை அகற்றுவதற்காக வீட்டை முழுமையாகக் கழுவி சுத்தம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையை தவறாக வழிநடத்தும் வகையில் இது நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலையை செய்துவிட்டு, முற்பகல் 11.40 மணிக்கு தனது பணியிடத்திற்குச் சென்று மாலை 3.40 மணியளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் மாலை 3.50 மணியளவில் சந்தேக நபர் வீட்டிற்கு வந்த போது, ​​தனது தாய் பிரச்சனையில் இருப்பதாக சத்தம் போட்ட போது அயலவர்கள் பலர் வீட்டிற்கு வந்தனர்.

இதற்கிடையில், இந்த சந்தேக நபர் கஹவத்தை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு தாய் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

இரத்தினபுரி பொலிஸ் நாய்ப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேக நபரின் கைக்கடிகாரம் இறந்த தாயின் சடலத்திலிருந்து சில அடி தூரத்தில் கிடந்ததாகவும் பொலிஸ் நாய் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் வெளியாரொருவர் இதனைச் செய்திருக்க முடியாது எனத் தோன்றியதால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஹட்டனில் திடீர் சுற்றிவளைப்பு: 130 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

இரத்தினபுரியில் கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 22 மரணங்கள்

Pagetamil

அமரர் பெ. சந்திரசேகரனின் 15வது நினைவு தின நிகழ்வு

east tamil

வாகன விபத்தில் இருவர் பலி

Pagetamil

அதிக சத்தத்தில் பாட்டு கேட்டதால் விபரீதம்: தந்தையும் சகோதரனும் தாக்கி மூத்த மகன் பலி!

Pagetamil

Leave a Comment