கோட்டா தப்பியோடிய போது மீட்ட பணம் பற்றிய விசாரணை கைவிடப்படுகிறது!

Date:

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது அவரது அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

17.85 மில்லியன் ரூபா பணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி அன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு பிரதான அரசியல் முகாம்களும் ஒருவர் மாறி ஒருவரின் ஊழல்களை மூடி மறைக்கும் அரசியல் முறைமையை மாற்ற விரும்பிய பொதுமக்கள் கடந்த ஆண்டு பெரும் போராட்டங்களில் ஈடுபட்ட போது இந்த பணம் மீட்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்