நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
23 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 54 கைதிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையில் இருந்த சிசிடிவி கட்டமைப்புகள் மற்றும் உடல் ஸ்கனர் இயந்திரம் என்பன கைதிகளால் முழுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.




