கந்துவட்டி ஜீவனின் மற்றொரு ‘ஸ்டண்ட்’

Date:

கரும்புலி மாவீரர்களான கப்டன் மில்லர், கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரை பெற்றெடுத்த பெற்றோர்களை சந்தித்த, கந்துவட்டி ஜீவன், அவர்களிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

ஈழத் தமிழர் விடுதலைப் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கரும்புலிகளாக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த கரும்புலி கப்டன் மில்லர் அவர்களது தாயார் மற்றும் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்களது தாயார் ஆகியோர் கரும்புலிகள் நாளாகிய நேற்று (ஜ)லை 5) கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், கந்துவட்டிக்காரருமான ஜீவனால் பொன்னாடை போத்தி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் மற்றும் காங்கோசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்திய முதற்கடற் கடற் கரும்புலி அங்கயற்கண்ணி ஆகியோரை ஈன்றெடுத்த பொற்றோர்களே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

கந்துவட்டியில் ஈடுபட்ட ஜீவன், பின்னர் அரசியலில் ஈடுபட்டு, இலங்கை தமிழரசு கட்சியில் அடிக்கடி அணி மாறி கவனயீர்ப்பு சம்பவங்களிற்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அலி கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய 3 மகன்கள்!

கொல்லப்பட்ட ஈரானியத் தலைவர் அலி கமேனியின் மூன்று மகன்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அவரது...

நீர்கொழும்பு சிறைக்குள் கலவரம்: 2 பேர் பலி; 33 பேர் காயம்!

நேற்று (05) மாலை, நீர்கொழும்பு சிறைக்குள் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்த ஒரு...

பிரேசில் அதிர்ச்சித் தோல்வி: சர்வதேச போட்டிகளிலிருந்து நெய்மர் ஓய்வு!

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர், சர்வதேச கால்பந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்