இப்ராஹிம் ஹாஜியாரின் பிணை நிபந்தனைகள் தளர்வு

Date:

ஈஸ்டர் ஞாயிறு அன்று ஷங்கிலா மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளின் தந்தைக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று தீர்மானித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பங்களித்த சகோதரர்களான இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான தெமட்டகொடவில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன விடுத்த கோரிக்கையை நீதிபதி கவனத்தில் கொண்டு, இவ்வாறு தீர்மானம் எடுத்தார்.

ஏப்ரல் 21, 2019, ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இனவெறிக் கலவரங்களின் சாத்தியம் குறித்து அறிந்திருந்தும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்காமல் தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிவிக்காமல் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்