நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, இன்று (06) கூடிய அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க அனுமதி அளித்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரக்கோன் ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இச்சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் விரிவாக விசாரணை செய்து, தமது பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்