பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது கண்ணீர்ப்புகைக்குண்டு வீச்சு

Date:

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (18) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இலவசக் கல்வி, மருத்துவப் பட்டங்களை விற்கும் அரசின் சதியை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப மஹாபொல உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சுமார் 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்