சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (3) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் அது நடக்கவில்லை.
இது தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் வினவிய போது, ஒரே நேரத்தில் இரண்டு சட்டமூலங்களை முன்வைப்பது நீதித்துறை நடவடிக்கைகளில் இடையூறு சிலவற்றை உருவாக்கும் என்பதால், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1