படுக்கையில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி!

Date:

வீடொன்றில் கட்டிலில் தீயில் சிக்கி ஊனமுற்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (27) மல்வத்தை, ஹலவத்தை, இலிப்பாதெனிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அங்கவீனமடைந்துள்ளதாகவும், அதன் பின்னர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சகோதரி சில தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் இருந்த படுக்கையில் தீப்பிடித்த காரணத்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இதுவரை தெரியவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்