வடக்கு வைத்தியர்கள்- சட்டத்தரணிகளிடையே துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம்!

Date:

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி, வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது வருடமாக நாடாத்தப்படவுள்ள துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை(17) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக, பெண் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே முதன்முதலாக வலைப்பந்தாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே போட்டி தொடர்பான விடயங்கள் அறிவிக்கப்பட்டன.

கடந்த வருடம் முதல் தடவையாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்