யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் பகுதியில் நடந்த கிளித்தட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறு வாள்வெட்டில் முடிந்துள்ளது.
நேற்று இரவு 9.40 மணியளவில்இச் சம்பவம் இடம்பெற்றது.
நவாலி வடக்கு திருச்சபை வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் 38, 29, 23 வயதான 3 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



