யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

Date:

யழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்டபோதும் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை. இதையடுத்து பொலிசாரிடம் முறையிடப்பட்டது.

ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கைதான ஆசிரியர் ஏற்கெனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்லை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...

பிள்ளையானின் சித்திரவதை முகாமில் செயற்பட்ட 2 பேர் கைது!

முன்னாள் பிரதி அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்