O/L மாணவர்கள் அட்டகாசம்: பாடசாலை சேதங்களை திருத்த பெற்றோர் ஒப்புதல்!

Date:

மகுல்தமன மகா வித்தியாலயத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களின் பெற்றோர், சேதப்படுத்தப்பட்ட உடைமைகளுக்குத் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு இணங்கியுள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திம்புலாகலை கல்வி வலயத்திற்குட்பட்ட மகுல்தமன மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று பாடசாலையின் மின் உபகரணங்கள், மின்விசிறிகள் மற்றும் மலசலகூட கதவுகளை உடைத்துள்ளதாக அண்மையில் மனம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பரீட்சை முடிந்து வீடுகளுக்குச் செல்லவிருந்த மாணவர்கள், பாடசாலைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை (12) காலைக்குள் திருத்தங்களை முடிக்க பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்