பிரெஞ்ச் ஓபன்: 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல்வீரர் ஜோகோவிச்

Date:

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நோர்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதைத் தொடர்ந்து, டென்னிஸ் சகாப்தத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.

காஸ்பர் ரூட்டை 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

34வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச் பெறும் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

முன்னதாக, ஆடவர் ஒற்றையர் டென்னிஸில் ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை ஜோகோவிச் இன்று முந்தினார். ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் படைத்தார்.

இதில் இன்னொரு ஆச்சரியமாக, ஜோகோவிச் வென்ற 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 10க்கும் மேற்பட்டவை அவர் 30 வயதுக்குமேல் வென்றவை.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்