தங்குமிடமின்றி 3 மணித்தியாலங்கள் காத்திருந்த இலங்கை அணி!

Date:

2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்பதற்காக சிம்பாப்வேயின் புலவாயோ நகருக்கு சென்றுள்ள இலங்கை அணி, ஹொட்டலில் தங்கும் இடம் தொடர்பில் ஏற்பட்ட தாமதத்தினால் சுமார் 3 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட தகவலில்,

இலங்கை அணியினர் இன்று நண்பகல் ஹொட்டலுக்கு வந்துள்ளனர், நுழையும் நேரத்தில், இலங்கை அணிக்கு சற்று முன்னதாக வந்த மற்றொரு தேசிய கிரிக்கெட் அணி, “செக் இன்’ செய்யும் பணியில் இருந்தது.

இந்த சூழ்நிலையில் சில இலங்கை தேசிய அணி வீரர்கள் “செக்-இன்” செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் இந்த விடயத்தை ஹொட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து, குறுகிய காலத்திற்குள் சிக்கலை சரிசெய்ய முடிந்தது என தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகன தரிப்பிடத்தில் விவாகரத்துக்கு நீதிமன்ற சென்று திரும்பிய கணவன் மனைவி மைத்துனருக்கிடையே சண்டை 3 பேர் கைது

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி  வந்த...

கிளிநொச்சியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல் வல்லுறவு

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல்...

விவாகரத்து வழக்கின் பின் கணவன், மனைவி, மைத்துனன் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டல்!

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்