பொலிசாரிடம் சிக்கிய இளைஞனின் கைபேசிக்கு போதைப்பொருள் கேட்டு வந்த 50 அழைப்புக்கள்!

Date:

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிக்கு,  ஐஸ் போதைப்பொருள் தருமாறு கேட்டு சுமார் 50 பேர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக ஹலவத்த உடப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இந்த அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தெரியாமல் போதைப்பொருள் கேட்டு அழைப்புகளை விடுத்ததாகவும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் அழைப்புக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஐஸ் போதைப்பொருளை கேட்டதாக கூறப்படும் நபர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

முன்னதாக, 19 வயதுடைய இளைஞன் ஒருவரைக் கைதுசெய்து அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இந்த 23 வயதுடைய இளைஞரும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்