பிள்ளைகளின் பசியை போக்க பலாக்காய் பிடுங்க முற்பட்ட தாய் பலி

Date:

தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக பலாக்காய் பிடுங்க முயன்ற  நான்கு பிள்ளைகளின் தாய் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கம்பளை நாரங்விட்ட பண்டாரவத்தையைச் சேர்ந்த சாந்தி குமாரி என்ற 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் பாடசாலைக்குச் செல்கிறார்கள்.

அவரது கணவர் தனியார் துப்புரவு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருவதும், இறந்தவருக்கு வேலை இல்லை என்பதும் தெரியவந்தது.

கணவன் சம்பாதிக்கும் சொற்ப வருமானம் குடும்ப பராமரிப்புக்கு போதாததால் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல், உணவு வழங்குதல், மருந்து வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த தாய் பலாக்காயின் மூலம் சில வகையாக உணவுகளை தயாரித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக மதிய உணவில் பலாப்பழத்தை பாவித்துள்ளார்.

கடந்தவாரம், வீட்டின் அருகே இருந்த பலா மரத்தில் ஒரு காய் இருப்பதைப் பார்த்து, அதை பறிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கத்தியை தடியொன்றில் கட்டி காயை பறிக்க முயன்றாலும், பழம் உயரத்தில் இருந்ததால் அதை பறிக்க முடியவில்லை. இறுதியில் பலா மரத்தின் அருகே இருந்த சாதிக்காய் மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முயன்றார். எனினும், கிளை முறிந்து கீழே விழுந்து விட்டார்.

பலத்த சத்தம் கேட்டு பிள்ளைகள் மரத்தின் அருகே வந்து பார்த்தபோது, ​​அவர் மரத்தின் அருகே கிடப்பதைக் கண்டு கிராம மக்களின் உதவியை நாடி கம்பளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சுமார் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்