உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயமாக தோல்வியிடையும்
என்ற கூற்றினை ஏற்றுக்கொண்டமையினாலே உள்ளுராட்சி மன்ற தேர்தலை
பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக தொழிலாளர் தேசிய
சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
பழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று(18) சனிக்கிழமை ஹட்டனில் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த அரசாங்கம் தேர்தலை நடாத்த பணம் இல்லையென கூறி தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது. எமது நாடு ஒரு ஜனநாயக நாடு. தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இந்த அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்கும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தற்காலிகமாக தேர்தல் பிரச்சாரத்தை
இடைநிறுத்திவிட்டு இரண்டு மாதங்களின் பின்னர் தேர்தல் பிரச்சாரங்களை
முன்னெடுக்க உள்ளோம். தேர்தலுக்கான திகதி ழூன்று மாதங்கள் தள்ளுபடியானால்
வேட்பு மனுக்கல் இரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய வேட்பு மனுக்கல்
ஏற்றுக்கொள்ளபட நேரிடும். உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறாவிட்டால்
மக்களை வீதிக்கு இறக்கி அரசாங்கத்திற்கு அழுத்தத்தை
கொடுப்போம்.
மலையகத்தில் வரலாற்றில் 2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு
காலப்பகுதியில் மாத்திரமே பாரிய அபிவிருத்திகள் எமது அரசாங்கத்தின் ஊடாக
முன்னெடுக்கப்பட்டன. மின்சார அதிகரிப்பு என்பது நாட்டு மக்கள் அனைவரும்
பாரிய கஷ்டத்தினை அனுபவித்துள்ளார்கள். பணம் இல்லையென கூறி தேர்தலை
தள்ளுபடி செய்ய முடியாது. இரண்டு பில்லியன் ருபாய் பணம் இருந்தால் தேர்தலை
நடாத்த முடியும் என குறிப்பிட்டார்.
-பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்.-