வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையால் சுயேச்சை குழுவொன்றின் தலைவர் ஒருவர் கதறியழுத சம்பவம் மாத்தளையில் பதிவாகியுள்ளது.
மாத்தளை- உக்குவளை பிரதேச சபைக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட சுயேச்சை குழுவொன்றின் தலைவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் நேற்று (21) பகல் மாத்தளை மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த உறுப்பினர் கதறி அழுதுள்ளார்.
அவரது வேட்புமனுவில் சமாதான நீதவானோ சட்டத்தரணி ஒருவரோ உறுதிப்படுத்தப்படாமையால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் தன்னுடைய வாகனத்தை அடகு வைத்து கட்டுப்பணத்தை செலுத்தியதாகத் தெரிவித்து அவர் கதறி அழுது அமைதியின்மையை ஏற்படுத்திய அவரை அங்கிருந்து வெளியேற்ற மாத்தளை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1