நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

Date:

நுவரெலியாவின் சாந்திபுராவில் அமைந்துள்ள Eagle’s Viewpoint கண்காணிப்பு தளம், இன்று (26) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய ஈர்ப்பிடமாக இது திகழ்கிறது.

இலங்கையின் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள, நாட்டின் மிக உயரமான கிராமமான சாந்திபுராவை சுற்றி இந்த பார்வை மேடையை விமானப்படை உருவாக்கியுள்ளது.

இந்நிகழ்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஒரு முக்கிய மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் முதன்மை நோக்கத்துடன் 2024 ஜூலை 31ம் திகதியன்று தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் இலங்கை விமானப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இதற்கான நிதி பங்களிப்பை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இரசிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சாந்திபுராவின் காட்சியழகை அனுபவிக்க Eagle’s Viewpoint சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று, கல்முனை பிராந்திய...

செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” போராட்டம் நாளை ஆரம்பம்!

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி  “நீதியின் ஓலம் 2”  கவனயீர்ப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்