சனிக்கிழமை ரியாத்தில் நடந்த WWE கிரவுன் ஜூவல் தொழில்முறை மல்யுத்தப் போட்டியின் போது லோகன் போல் முழங்காலில் காயம் அடைந்தார்.
27 வயதான போல் ஒரு ருவீட்டில், ரோமன் ரெய்ன்ஸுக்கு எதிரான போட்டியின் போது தசைக்கிழிவு ஏற்பட்டதாக கூறினார்.
போட்டியின் பாதியிலேயே தனக்கு காயம் ஏற்பட்டதாக தனது வலது முழங்காலில் ஐஸ் கட்டி இருப்பதைக் காட்டும் புகைப்படத்தையும் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
போல் தனது மூன்றாவது WWE போட்டியில் சனிக்கிழமையன்று ரோமன் ரெய்ன்ஸிடம் தோற்றார். WWE யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டி இர்.
இதேவேளை, WWE சூப்பர்ஸ்டார் ப்ரோக் லெஸ்னருக்கும் பாபி லாஷ்லிக்கும் இடையிலான போட்டியில், லெஸ்னர் வெற்றி பெற்றார்..
WWE மகளிர் டக் டீம் சாம்பியன்ஷிப்பை டகோடா காய் மற்றும் ஐயோ ஸ்கை ஆகியோர் வென்றனர்ஃ அவர்கள் அலெக்ஸா பிளிஸ் மற்றும் அசுகாவை தோற்கடித்தனர்.
ட்ரூ மெக்கின்டி மற்றும் கேரியன் க்ராஸ் இடையேயான போட்டியில் மெக்கின்டி வெற்றி பெற்றார்.
பிரவுன் ஸ்ட்ரோமேன் ஓமோஸை தோற்கடித்தார்.
torn meniscus, MCL & potentially ACL
happened halfway through the match. keep y’all updated 👍🏼 pic.twitter.com/3v5tpBABCk
— Logan Paul (@LoganPaul) November 6, 2022
தி யூசோஸ் தி ப்ராவ்லிங் புரூட்ஸை டக் டீம் சாம்பியன்ஷிப்பில் தோற்கடித்தனர்.
WWE ரோ பெண்கள் சாம்பியன்ஷிப்பில் பியான்கா பெலேர் பெய்லியை தோற்கடித்தார்.
WWE கிரவுன் ஜூவல் நிகழ்வு சவூதி தலைநகர் மிர்சூல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
WWE 2014 முதல் சவுதி அரேபியாவில் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.



