ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய 51வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பிலான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜெர்மனி, அத்துடன் மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகியவற்றால் அனுசரணை செய்யப்பட்ட இந்தத் தீர்மானம், மார்ச் 2021 இல் நிறைவேற்றப்பட்ட UNHRC தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டதுடன், சில மேலதிக இணைப்புக்களையும் கொண்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்ப்பு இயக்கத்தின் அடக்குமுறை, ஊழலின் தாக்கம் பற்றிய விசாரணையும் இதில் அடங்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1