Team 16ன் தன்னலமற்ற சேவை

Date:

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை என்று கூறும் திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு, “இனி ஒரு விதி செய்வோம்” திட்டத்தின் கீழ் 2வது தடவையாக தன்னலமற்ற சேவை நோக்கில், Team 16 அமைப்பினால் மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.

“கல்வி ஒன்றே கடைசி ஆயுதம்” என்ற உன்னத நோக்கத்துடன் இந்த ஆண்டும், சமூகப் பொறுப்புடன் செயல்படும் Team 16 அமைப்பு, கல்விக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற கொள்கையுடன், பொருளாதார சவால்களை சந்திக்கும் மூன்று பாடசாலைகளின் 310 மாணவர்களுக்காக 2,240 அப்பியாசக் கொப்பிகள் விநியோகித்து, “இனி ஒரு விதி செய்வோம் 2.0” திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் தி/மூ/கதிரேசர் வித்தியாலயம், தி/மூ/விவேகானந்தர் வித்தியாலயம், தி/மூ/மேங்காமம் அரச தமிழ்ப் பாடசாலை எனும் 03 பாடசாலைகளிலும் உள்ள 310 மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளை வழங்கி அவர்களின் கற்றலிற்கான பாதை வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்த திட்டத்திற்கு ஊடகக் கூட்டாளராக Studio Levies குழுவினர் செயற்பட்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில்...

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்