29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பதும் கெர்னரை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு!

சமூக ஆர்வலர் பதும் கெர்னரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.

பதும் கெர்னரின் புகைப்படங்கள் இலத்திரனியல் ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் பரவலாக வெளியிடப்பட்டதாகவும், எனவே அவர் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டதன் நோக்கம் குறித்தும் கெர்னர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அரசகுலரத்ன இன்று நீதிமன்றில் கேள்வி எழுப்பியதாக  தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சட்டத்தரணியின் கோரிக்கைகளை நிராகரித்த மேலதிக நீதவான் பதும் கெர்னரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

கடந்த ஜுலை 13ஆம் திகதி பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெர்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாகவும், பாராளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை அகற்றியதாகவும், கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர் ஜூலை 18 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், உடல்நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி ஆஜராகவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment