இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளிற்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, யாழ் இந்து மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளின் முன்பாக போராட்டங்கள் நடைபெற்றன.
இதேவேளை, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (04) கொழும்பு கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
போராட்டக்காரர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.






