EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

Date:

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு!! தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து வலய, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதிய (EPF) தரவுக் கட்டமைப்புடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் குறித்த இரு நாட்களிலும் முன்னெடுக்கப்படமாட்டாது. இதற்கமைய, குறித்த இரண்டு நாட்களிலும் கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் பதிவு செய்தல் உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் இடம்பெறாது என்பதால், அந்த நாட்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கியுள்ள அனைவரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் எந்தவொரு அலுவலக நாளிலும் உரிய தொழில் அலுவலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்