இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம் ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டதையடுத்து, பேருந்துக் கட்டணங்களைத் திருத்தும் முடிவை எடுத்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியது.
எவ்வாறாயினும், அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது.
பேருந்து கட்டணம் எந்த சதவீதம் குறைக்கப்படும் என்பது இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




