மட்டக்களப்பில் சுவர் விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி!

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் நேற்று புதன்கிழமை வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான புணாணை பொத்தனையைச் சேர்ந்த உசனார் பாத்திமா றீமா என்ற மூன்றரை வயதுடைய சிறுமியே வீட்டின் சுவர் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் வீடு உடைக்கப்பட்டு ஒரு பக்கம் சுவர் மாத்திரம் காணப்பட்ட நிலையில் சீமெந்து கல் சுவர் ஓரத்தில் இருந்து மூன்று சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

தற்போது காற்று பலமாக வீசி வரும் நிலையில் சுவர் தீடிரென சரிந்து விழுந்ததில் குறித்த சிறுமி உயிழந்துள்ளதுடன், மற்றைய இருவரும் தெய்வாதீனமான உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்த மூன்றரை வயதுடைய சிறுமியின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்