மட்டக்களப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் குளவிக் கொட்டிற்கு இலக்காகினர்!

Date:

மட்டக்களப்பு வாகநேரி பெட்டைக் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் 6 பேர் குளவி குத்துக்கு இலக்காகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பிரதேசத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்து தங்களது வாழ்வாதாரததினை மேற்கொண்டு வந்தனர். வழக்கம்போல் நேற்று காலை (3) மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென வந்த குளவிக் கூட்டம் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியுள்ளது.

குளவியின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக குளத்து நீரினுள் மூழ்கியும், கொண்டு சென்ற துணிகளை போர்வையாக பயன்படுத்தியும் பிடித்த மீன்களை கைவிட்டு தப்பித்து பாதுகாப்பு பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

3 சிறுவர்கள் உட்பட 6 பேர்கள் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்