யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

Date:

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை!
​யாழ். பிராந்தியத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் அரை ஆண்டுக்கான நிர்வாக மற்றும் செயற்பாட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (01) யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றன.
​யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் J.P.S. ஜெயமஹ அவர்களின் தலைமையில் குறித்த பரிசோதனை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
​யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் K.A.E.N. தில்றுக் மற்றும் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி R.M.P. பாலித்த செனவிரத்ன ஆகியோரின் ஏற்பாட்டில் இப் பரிசோதனைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
இப்பரிசோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் தமது பொதுச்சேவைகளையும் பாதுகாப்புப் பணிகளையும் முன்னெடுப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு நிலைமைகள் என்பன விசேடமாக அவதானிக்கப்பட்டு, துல்லியமாகப் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

ஈரானை கடுமையாக தாக்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

போரின் அடுத்த கட்டம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கும் நிலையில்,...

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்