கல்முனையில் இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்!

Date:

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர்கள் எரிபொருள் நெருக்கடி காரணமாக போராட்டத்தை மேற்கொண்டனர்.

இன்று (6) திடிரென கல்முனை பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ முன்றலில் ஒன்று கூடி தமக்கு எரிபொருளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் , கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் , தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 210 லீற்றர் பெற்றோல் கல்முனை ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தி வழமை போன்று தமது பணிகளை கல்முனை பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்தனர்.

மேலும் இப்போராட்டத்தினால் கல்முனை பிராந்திய போக்குவரத்து டிப்போவில் எரிபொருளை பெற வந்திருந்த தனியார் பேரூந்துகள் வீதியை மறித்து காணப்பட்டமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...

நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர்

டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக...

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்