ரஷ்ய ஜனாதிபதி- கோட்டா தொலைபேசியில் உரையாடல்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பிற்பகல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி புட்டினுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்களை வெற்றிகொள்வதற்கு தமது அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறையாக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடனுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் ஏரோஃப்ளோட் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தலைவர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கௌரவத்திற்காக எழுந்து நின்ற பல்கலைக்கழக வேந்தர்! ருஹுண பல்கலைக்கழகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி!

பொதுவாக, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் வேந்தர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே மாணவர்களுக்குப்...

பன்னிப்பிட்டியாவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்