குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணி நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு முன்பதிவு கட்டாயம் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சந்திப்பை முன்பதிவு செய்வதற்கு பொதுமக்கள் http://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்தை அல்லது 0707 101 060 என்ற தொடர்பு இலக்கத்தைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
பொது வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை தொலைபேசி இணைப்பு இயங்கும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 2,000 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால், அசௌகரியங்களைத் தவிர்க்க பொதுமக்கள் நேரில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுவதையும் நிராகரித்துள்ளது.




