27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பொலிசாரின் இடையூறுகளை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு கடிதம் அனுப்பினார் வடக்கு அவைத்தலைவர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டிக்க பொலிசாரினால் இடையூறுகள் ஏற்படாமலிருக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் ஆயுதப் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை கூட்டாக நினைவு கூர்ந்து அஞ்சலி செய்வது தாங்கள் நன்றாக அறிந்ததே.

இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் என்ற வகையில் வன்முறையால் கொல்லப்பட்ட ஆன்மாக்களின் சாபம் பற்றி நாம் அறிவோம். இந்த நாட்டை இந்த ஆன்மாக்களின் சாபம் சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது தெளிவானது. கர்மவினையின் தாக்கங்களே இந்த நாட்டை தாக்குகின்றது என்பதும் தெளிவு.

இந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்வதால் அவை அமைதி பெறுகின்றன என்பது எமது சமய நம்பிக்கையாகும்.

இறுதியாக படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் மேற் குறிப்பிட்டவாறு மரணித்த ஆன்மாக்களுக்கு அமைதியான முறையில் 18.05.2022 ஆம் திகதி அஞ்சலி மற்றும் பிரார்த்தனை செய்ய தமிழ் மக்கள் மிகவும் தீர்மானமாக உள்ளனர்.

எனினும், முல்லைத்தீவு பொலிஸார் இதனை தடை செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை கவலைக்குரியது. இது மிகவும் துரதிஷ்டவசமானதும், எமது அடிப்படை சமய மற்றும் சமூக உரிமைகளை மறுக்கும் செயலாகும்.

ஆகவே இந்த விடயத்தில் தாங்கள் தலையிட்டு, 18.05.2022 ஆம் திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

Leave a Comment