நுகேகொட, மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட வாசஸ்தலத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று (31) பிற்பகல் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோசம் எழுப்பினர்.
ஜனாதிபதியின் வாசஸ்தல பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ழைவதை தடுக்க, கடுமையான வீதித் தடைகளும், போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.
இன்று பிற்பகல், ஜூபிலி தபால் சந்திக்கு அருகில் ஒன்று கூடிய மக்கள், மிரிஹான, பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தின் நுழைவாயிலில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Massive crowd at the Nugegoda Jubilee Post protest. It's a whole new atmosphere & so much support from the vehicles passing by.#lka #SriLanka #EconomicCrisisLK #SriLankaEconomicCrisis #GoHomeRajapaksas #පන්නමු pic.twitter.com/5u5JaNFbI1
— Prasad Welikumbura (@Welikumbura) March 31, 2022
ஜனாதிபதியின் வாசஸ்தலப்பகுதிக்குள் நுழைய முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையும் ராணுவமும் தடுத்து நிறுத்தியது.
ஆர்ப்பாட்டம் காரணமாக நுகேகொட – மஹரகம 119 நெடுஞ்சாலை முற்றாக தடைப்பட்டது.
Loud and clear… #GoHomeRajapaksas #GoHomeGota #Mirianaprotest pic.twitter.com/FzVxmOzZJF
— Marlon Ariyasinghe (@MarlonAriy) March 31, 2022
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
https://twitter.com/i/status/1509564410922246149
கண்ணீர் புகைக்குண்டுக்கு மத்தியில் ஜனாதிபதியின் வாசஸ்தலம் மீது மக்கள் கற்களை வீசி எறிந்தனர்.
Protest infront of President house got tensed ! #GoHomeRajapaksas #GoHomeGota2022 pic.twitter.com/Yi6T0bBXR2
— Nuzly 🇵🇸 𓂆 (@nuzlyhameem) March 31, 2022
தற்போதும் அந்த பகுதியில் கொந்தளிப்பான நிலைமை காணப்படுகிறது.
https://twitter.com/i/status/1509582392163708929




