ஜனாதிபதி இல்லத்தை சூழ பெரும் களேபரம்: 6 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்!

Date:

UPDATE: காலை 6 மணியுடன் ஊரடங்கு சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார முகாமைத்துவமே காரணமென்பதை சுட்டிக்காட்டி, அவரை பதவி விலக வலிறுத்தி ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை இலங்கை காவல்துறை விதித்துள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ பஸ் மற்றும் பல வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டக்காரர்கள் நடு இரவு கடந்தும் அந்த இடத்தில் தங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக இராணுவம் மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை  ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த சுமார் 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆறு பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://twitter.com/i/status/1509603738939707395

காயமடைந்தவர்களில் சம்பவத்தை செய்தி வெளியிட்ட பல ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரியவருகிறது.

சம்பவத்தை தொடர்;து 6 பொலிஸ் பிரிவுகளிற்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட, களனி
கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிற்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்