‘Dune’ திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
அதுபோலவே ஒஸ்கார் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒஸ்கார் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
CODA என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. இது பிரெஞ்ச் படத்தின் ரீமேக் ஆகும்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஓஸ்கார் விருதை வென்றுள்ளார். கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது.
The Eyes of Tammy Faye என்ற திரைப்படத்தில் நடித்த ஜெஸ்சிகா கேஸ்டைன் (Jessica Chastain) சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான Dune திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
The Oscar for Best Actress in a Leading Role goes to… #Oscars pic.twitter.com/Yny0Mxj9Yr
— The Academy (@TheAcademy) March 28, 2022
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஓஸ்கார் விருது Encanto திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‛டிராய் கோட்சர்’ பெற்றார். சிறந்த துணை நடிகை விருதினை ‛அரியானா டிபோஸ்’ வென்றார்.
The Oscar for Best Actor in a Leading Role goes to… #Oscars pic.twitter.com/yEH5RLzxh2
— The Academy (@TheAcademy) March 28, 2022
சிறந்த பாடலுக்கானா விருதை ஜேம்ஸ் பாண்ட் நடித்த No Time To Die க்கு கிடைத்துள்ளது.
King Richard திரைப்படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.
The Power of the Dog படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக ஜேம் கேம்பியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது.