இலங்கை டெஸ்ட் கப்டன் திமுத் கருணாரத்ன, ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறினார்.
அவரது சிறந்த தர நிலை இதுவாகும்.
பெங்களூரில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போராட்ட இன்னிங்ஸில் 107 ஓட்டங்கள் பெற்ற பின்னர், 3 இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு முன்னேறினார்.
மேலும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை பந்துவீச்சாளர்கள் லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் தலா ஐந்து இடங்கள் முன்னேறி முறையே 32 மற்றும் 45 வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
பெங்களூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் முதல் முறையாக டெஸ்ட் 5 விக்கெட் உட்பட 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்தார்.
எவ்வாறாயினும், விராட் கோஹ்லி ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தார்.
துடுப்பாட்ட தர வரிசையில், மார்னஸ் லாபுசாக்ன் முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில், ஜோ ரூட், ஸ்டிவ் ஸ்மித், கேன் வில்லியம்ஸ் ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சாளர் தர வரிசையில் பட் கம்மின்ஸ் உள்ளார். அஸ்வின், ரபாடா ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
சகலதுறை வீரர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை இழந்தார். முதலிடத்தை மேற்கிந்தியத் தீவுகளின் ஜேஸன் ஹோல்டர் கைப்பற்றினார்.