கல்முனையில் தெருவிளக்குகளை அணைக்க நடவடிக்கை!

Date:

நாட்டில் மின்சாரத்தடை, எரிபொருள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் முன்மாதிரியான செயற்பாட்டின் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபையின் பராமரிப்பின் கீழுள்ள பொது விளையாட்டு மைதானங்கள், மையவாடிகள், சில வீதிகளில் ஒளிர்கின்ற மின்குமிழ்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஆலோசனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய மருதமுனை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, கல்முனை நகர பகுதிகளில் உள்ள பகுதிகளில் வழமையாக ஒளிர்கின்ற மின்குமிழ்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி தேவைக்கேற்றவாறு பயன்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் குறித்த தெரு மின் விளக்குகளை அணைப்பதற்கு அது தொடர்பில் உரிய பொறுப்பாளர்களுக்கும் முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை நிந்தவூர் பிரதேச சபையும் தெரு விளக்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் பொருளாதார நிலைமையினை கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் பொது மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளன.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்