பாப்பரசரை சந்தித்தார் கொழும்பு பேராயர்!

Date:

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் இன்று உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு (இலங்கை நேரப்படி சுமார் 3.00 மணியளவில்) நடைபெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
காலம் கடந்தாலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவின் அவசியம் குறித்து திருத்தந்தையிடம் கர்தினால் தெரிவித்ததாக கொழும்பு உதவி ஆயர் ஜே.டி.அந்தோனி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்தத் தவறியது, நீதிக்கான இலங்கை கத்தோலிக்கர்களின் போராட்டம், இன்றுவரை இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை எடுத்துள்ள நடவடிக்கைகள், அதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண்பதில்  அலட்சியம் ஆகியவை குறித்து கார்தினால் விளக்கியதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு பேராயர் மாளிகையில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதவி ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப்

கடந்த வாரம் பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர்...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்