பொது போக்குவரத்தில் இயங்கும் தனியார் பஸ்களுக்கு தேவையான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் பஸ்களுக்கான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து விநியோகிக்குமாறு அனைத்து டிப்போ முகாமையாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.




