ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இலங்கை திருமதி அழகுராணி புஷ்பிகா டி சில்வாவிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
அவர் உட்பட 37 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சமுதிதவின் வீடு தாக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஷ்பிகா டி சில்வா யூடியூப் சனல் ஒன்றின் ஊடாக சமுதித சமரவிக்கிரமவுக்கு வழங்கிய நேர்காணலில் அடங்கியிருந்த விடயங்களை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
புஷ்பிகா டி சில்வாவுடன் அவரது சட்டத்தரணி சரித் பத்திரத்னவும் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.




