நீர்க்கட்டணம் செலுத்தாத 48 அரசியல்வாதிகளிற்கு எதிராக வழக்கு!

Date:

10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நீர் கட்டணத்தை செலுத்த தவறியதாக கூறப்படும் 48 முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சபையின் சட்டப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, சட்டப் பிரிவு வழக்குப்பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரியவருகிறது.

நிலுவைத் தொகையை வசூலிக்க முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்களுக்கு சட்டப் பிரிவு முன்னதாக இறுதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இறுதி அறிவிப்புகளை அனுப்பிய நிலையில், ஐந்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது கட்டுப்பணத்தை அண்மையில் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் கட்டணத்தை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் என்று கூறப்படுகிறது.

பொது மக்களிடமிருந்து நிலுவைத் தொகையை அறவிடுவதற்கு முன்னர், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு வாசுதேவ நாணயக்கார மேலும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்