சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணைக் கட்டளை 7ஆம் திகதி!

Date:

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோரினால் இன்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஸ்புல்லா தாக்கல் செய்த பிணை விண்ணப்பத்தை புத்தளம் மேல் நீதிமன்றம் அண்மையில் நிராகரித்துள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு, பயங்கவாத தடைச்சட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 20 மாதங்களாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஹிஸ்புல்லாவை முற்படுத்திய போது, மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு அவருக்கு நீதிபதி அறிவித்தார்.

ஜனவரி 20ஆம் திகதி ஹிஸ்புல்லா மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்