பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 4 பேர் இன்று (28) நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2020 நம்பர் 27, 28ஆம் திகதிகளில் செங்கலடி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 4 இளைஞர்கள் முகப் புத்தகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் புகைப்படத்தினை பதிவிட்டதாக குறிப்பிட்டு, ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையம் சென்று 9-12 மணிக்குள் கையொப்பமிடல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்டையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
-ருத்திரன்-




