10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 46,000 யூரோக்களை டுபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட இருவரை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று (2) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
டுபாய் செல்லவிருந்த இருவரின் பயணப் பொதிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.




