இன்று காலைஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மூன்று மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையிலும் மற்றுமொரு மாணவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்கள் ராகம மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




