வட்டுக்கோட்டையில் திருட்டு!

Date:

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று மதியம் (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி வருகின்ற நிலையில் நேற்று அவர் கடமைக்கு சென்றிருந்தார்.

அவரது மனைவி, மகளை பாடசாலையில் இருந்து தனது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு  பி.ப 4 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதன்போது வீட்டின் கண்ணாடி உடைக்கப்பட்டு ஒரு பவுண் நகையும் பத்தாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் திருடனை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்