தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய 4 பேருக்கு பிணை!

Date:

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவைச்  சேர்ந்த 4 பேர் இன்று (28) நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2020 நம்பர் 27, 28ஆம் திகதிகளில் செங்கலடி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 4 இளைஞர்கள் முகப் புத்தகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் புகைப்படத்தினை பதிவிட்டதாக குறிப்பிட்டு, ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையம் சென்று 9-12 மணிக்குள் கையொப்பமிடல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்டையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

-ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்