25.1 C
Jaffna
January 3, 2025
Pagetamil
மலையகம் முக்கியச் செய்திகள்

அக்கரபத்தனையில் ஆலய விக்கிரங்கள் உடைப்பு: மக்கள் ஒன்று கூடியதால் பதற்றம்!

அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் 02.01.2022 அன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அக்கரப்பத்தனை நகரத்தில் இதுவரை காலமாக ஆலயம் ஒன்று இல்லாத நிலையில் புதிதாக புனரமைக்கப்பட்ட குறித்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலேயே இவ்வாறு சிலைகள் மற்றும் விக்கிரங்கள் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் இம்மாதம் 19ம் திகதி முதல் 23ம் திகதி வரை கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்களும் அனைத்து கடைகளையும் மூடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஹட்டனில் திடீர் சுற்றிவளைப்பு: 130 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

இரத்தினபுரியில் கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 22 மரணங்கள்

Pagetamil

அமரர் பெ. சந்திரசேகரனின் 15வது நினைவு தின நிகழ்வு

east tamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

வாகன விபத்தில் இருவர் பலி

Pagetamil

Leave a Comment